ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்றும் முக்கிய பேச்சுநடைபெறவுள்ளது.
இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்கு மேலும் மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நவின் திசாநாயக்க, பாலித ரங்கே பண்டார மற்றும் ருவான் விஜேவர்தன ஆகியோரின் பெயர்களே இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கு தீர்மானித்துள்ளார்.
இதனையடுத்து, கட்சியின் புதிய தலைமைத்துவம் தொடர்பில் நேற்றைய தினம் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், இது தொடர்பில் நேற்றைய தினம் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை.