மாகாணசபை தேர்தல் நடைபெறும்வரை ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ், கட்சியை மறுசீரமைக்க வேண்டும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமைத்துவத்தின்கீழ், கட்சி மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் இதன்போது, கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் நேற்று (12) மேற்கொண்ட கலந்துரையாடலின்போது, இந்த விடயங்கள் பேசப்பட்டுள்ளன.
ரணில் விக்கிரமசிங்கவின் கொழும்பு 03 அமைந்துள்ள வீட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.