புதிய அமைச்சுக்கள் பெயரிடப்பட்டுள்ள முறைகளை பார்க்கும்போது அமைச்சர்கள் நகைப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய தேசியப் பட்டியலுக்கு பெயரிடப்பட்டுள்ள ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடத்திய ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
´இவ்வாறான அமைச்சரவை ஒன்று உலகில் எங்கும் இல்லை. நிதி நிர்வாகத்திற்கு மஹிந்த, பாதுகாப்பு கோட்டாபய, இளைஞர் மற்றும் விளையாட்டு நாமலுக்கு, நிதி செலவிட பெசில், விவசாயத்திற்கு நீர் வழங்குவது சமல்´. என்று அவர் தெரிவித்தார்.
´எனது நண்பருக்கு பத்திக் அமைச்சும் கொடுத்து, துணியை கட்டிக் கொள்ள சொல்லியுள்ளார். அதாவது கோவணம் கட்டுவதற்கு துணியை கொடுத்துள்ளனர். அதுவும் சொல்லாமல் கொடுத்துள்ளனர்.
கப்பலில் பணம் வரும் வரையில் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு துறைமுக அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. இது நகைப்புக்குரிய விடயம் என வருத்தத்துடன் தெரிவித்தக் கொள்கிறேன். கோட்டாபயவை நம்பி வாக்களித்த அனைவருக்கும் முதலாவது அரை விழுந்துள்ளது.
நீங்கள் கொடுத்த மக்கள் ஆணையால் நாம் அமைதியாக இருக்கின்றோம். இன்னும் ஒரு மாதமளவில் நல்ல நல்ல விளையாட்டுக்கள் தொடர்பில் நாம் பேசுவோம்´. என ஹரீன் பெர்ணான்டோ மேலும் தெரிவித்தார்.