பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி, “மாத்தறை சந்தையில் வடை சுடும் ஹந்துநெத்தி” என்று வெளியிடப்பட்ட புகைப்பட பதிவு குறித்து ஹந்துநெத்தி பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பில் ஹந்துநெத்தி தனது பேஸ்புக் பக்கத்தில் பவிவொன்றை இட்டு இதனைக் கூறியுள்ளார்.
அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இன்று காலையில் இந்த பதிவினை பார்த்தேன். நான் தோல்வியடைந்த பின்னர் செய்யும் வேலை என்றுதான் இந்த புகைப்படபதிவை யாரோ ஒருவர் வெளியிட்டுள்ளார். எனினும், அதனை பதிவிட்ட நபருக்கு எனது நன்றிகள்
ஏனென்றால், நான் மத்திய வங்கியில் கொள்ளையடிப்பது போன்ற பதிவொன்றை இடாமல், வடை சுட்டு விற்பது போன்ற படத்தை வெளியிட்டமைக்கு நன்றிகள். உண்மையில் நான் இதனை விரும்புகின்றேன்” என்று பதிவிட்டுள்ளார்.