எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் தங்களுடைய கடமைகளை பொறுப்பேற்க வேண்டுமென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, கடுமையாக கட்டளையிட்டுள்ளமையால் தங்களுடைய கடமைகளை சகலரும் அவசர, அவசரமாக பொறுப்பேற்கின்றனர்.
இதில், நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, தன்னுடைய கடமைகளை நடுவீதியில் வைத்து பொறுப்பேற்றுக்கொண்டார்.
நீர்கொழும்பு ஊடாகச் செல்லும் சுரங்க பாதைக்கு அடிக்கல்லை நாட்டியே அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.