ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தலைமறைவாகிவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சிக்குள் உட்பூசல்கள் அதிகரித்துள்ள நிலையிலேயே அவர், தலைமறைவாகிவிட்டார்.
இந்நிலையில், தனக்கு நெருக்கமான சாகல ரத்னாயக்கவை, ரணில் விக்கிரமசிங்க, பொதுச் செயலாளராக நியமிக்கப்படவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அகில விராஜ் காரியவசத்தை அரசியலுக்குள் உள்வாங்கி, பொதுச் செயலாளர் பதவியைக் கொடுத்து, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியை வழங்கும் வரையிலும் இழுத்துச் சென்றவர் ரணில் விக்கிரமசிங்க ஆவார்.
அவரை தனிமைப்படுத்தி விட்டுவிட்டு, அகில விராஜ் காரியவசம் தலைமறைவாகிவிட்டார் என சிறிகொத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.