web log free
December 27, 2024

செயலாளர்களில்- தமிழ், முஸ்லிம் இல்லை

புதிய அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக, தமிழர் ஒருவரும் முஸ்லிம் ஒருவர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவும் நீதியமைச்சராக சப்ரி அலியும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், 25 அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில், தமிழ், முஸ்லிம் சார்பில் ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை. 

இதேவேளை, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க, சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஏற்கனவே பதவி வகித்த, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, தொடர்ந்தும் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். 


புதிய அமைச்சுக்களின் செயலாளர்களின் விபரங்கள் வருமாறு

01- டப்ளிவ்.எம்.டீ.ஜே. பிரனாந்து - அமைச்சரவையின் செயலாளர்

02- ஆர்.டப்ளிவ்.ஆர். பிரேமசிரி - பெருந்தெருக்கல் அமைச்சு

03- எஸ்.ஆர். ஆட்டிகல - நிதியமைச்சு

04- ஜே.ஜே. ரத்னசிறி - அரச சேவை, மாகாண உள்ளூராட்சி அமைச்சு

05- ஜகத் பீ. விஜேவீர - ஊடக அமைச்சு

06- ரவிந்ர ஹேவாவிதாரண - பெருந்தோட்ட அமைச்சு

07- அநுர திசாநாயக்க - நீர்ப்பாசன அமைச்சு

08- டப்ளிவ்.ஏ. சூழானந்த - கைத்தொழில் அமைச்சு

09- வசன்தா பெரேரா - மின்வலு அமைச்சு

10- எஸ். ஹெட்டியாராச்சி - சுற்றுலா அமைச்சு

11- ஆர்.ஏ.ஏ.கே. ரணவக்க - காணி அமைச்சு

12- என்.பீ.டீ.யூ.கே. மாபா பதிரண - தொழில் அமைச்சு

13- ஆர்.எம்.ஐ. ரத்நாயக்க - மீன்பிடி அமைச்சு

14- மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன - பாதுகாப்பு அமைச்சு

15- எம்.கே.பீ. ஹரிச்சந்திர - வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்

16- என்.பீ. மொண்டி ரணதுங்க- போக்குவரத்து அமைச்சு

17- கலாநிதி பிரியன் பந்து விக்கிரம - நீர்வழங்கல் அமைச்சு

18- ஜே.எம்.பீ. ஜயவர்த்தன -வியாபார அமைச்சு

19- மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க - சுகாதார அமைச்சு

20- மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஏ.கே. சுமேத பெரேரா - விவசாய அமைச்சு

21- அனுராத விஜேகோன் - இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு

22- கே.டீ.ஆர். ஒல்கா - வலுச்சக்தி அமைச்சு

23- அத்மிரால் (ஓய்வு) ஜயனாத் கொழம்பகே - வெளிநாட்டு அமைச்சு

24- வைத்தியர் அனில் ஜாசிங்க- சுற்றாடல் அமைச்சு

25- பேராசிரியர் கபில பெரேரா - கல்வி அமைச்சு

26- சிரிநிமல் பெரேரா - நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு

Last modified on Friday, 14 August 2020 01:48
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd