கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ், வேட்பாளராக களமிறங்குவதற்கு, தேசிய தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பி.திகாம்பரம், தன்னிடம் 2 கோடி ரூபாய் டே்டார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.
2 கோடி ரூபாய் பணத்தை மேசையின் மேல் வைத்தால், வேட்பாளராக நிற்பதற்கு அனுமதியளிப்பேன் என தன்னிடம் தெரிவித்தார் என்றும் திலகராஜ் தெரிவித்துள்ளார்.
தான் போட்டியிட்ட முதலாவது பொதுத் தேர்தலில், 67761 வாக்குகளைப் பெற்றேன். எனினும், தன்னிடம் பணம் இல்லாமையால். இம்முறை எனக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
பணம் இல்லாமையால், தேசிய பட்டியலில் இணைந்துகொள்ளுமாறு தன்னிடம் கேட்டுக்கொண்டார் என்றார்.