பொலிஸ் மோப்பநா பிரிவில் இருந்து அகற்றப்பட்ட, மோப்ப நாய்களை ஏலத்தில் விற்பனை செய்யும் நடவடிக்கை கண்டியில் நேற்று (15) நடைபெற்றது.
10 வயதைக் கடந்த நாய்களே இவ்வாறு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதன்போது 25 நாய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், இதில் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவில் இருந்த “வு பிரிடி“ என்ற மோப்ப நாய், ஒரு இலட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், ரெஜி, பெட்டிகா, எல்வின், பம்பர், ரோசி, ஹீரோ ஆகிய மோப்ப நாய்களும் நேற்று (15) ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதில் ஹீரோ என்ற மோப்ப நாய், 350 குற்ற விசாரணை நடவடிக்கைகளிலும் 600 போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.