web log free
December 27, 2024

அரசியலில் செப்டெம்பர் தீர்க்கமானது

செம்டெம்பர் மாதம் இலங்கை அரசியலில் பல்​வேறான மாற்றங்கள் ஏற்படுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
நாட்டிற்கு நேயமுள்ள அரசியலமைப்பு திருத்தம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முன்னெடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

உத்தேச அரசியலமைப்பை செப்டெம்பர் மாதமளவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

இதேவேளை அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்திலுள்ள பொருத்தமற்ற விடயங்களை திருத்தியமைத்து 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவருவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அண்மையில் தெரிவித்திருந்தார்.
 
 
 
 
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd