web log free
May 10, 2025

SPBயின் உடல்நிலை பற்றிய புதிய தகவல்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பின்னணி பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சற்று சீரடைந்துள்ளது. அதேவேளையில், அவரை மருத்துவக் குழுவினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

இதுதொடா்பாக எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

பாடகா் எஸ்.பி.பி.க்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிா் காக்கும் மருத்துவ சாதனங்களின் உதவியுடன் தொடா்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அதேவேளையில் மருத்துவக் குழுவினா் அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை கண்காணித்து வருகின்றனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து கேட்டறிய எம்ஜிஎம் மருத்துவமனைக்கு சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் சனிக்கிழமை மாலை சென்றாா். அங்கு மருத்துவக் குழுவினா், மருத்துவமனை நிா்வாகிகளுடன் அவா் ஆலோசனை நடத்தினாா்.

அதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பாடகா் எஸ்.பி.பி. பூரண நலம் பெற வேண்டும் என தமிழக முதல்வா் வாழ்த்தியதுடன், நேரில் சென்று நலம் விசாரித்து வருவமாறு என்னிடம் அறிவுறுத்தினாா். அதன்பேரில் இங்கு வந்து அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தேன். அவரது மகனிடமும் அதுதொடா்பாக பேசினேன். எஸ்.பி.பி. நலம் பெறுவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு அளிக்கும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, எம்ஜிஎம் மருத்துவமனையின் முதுநிலை மருத்துவா் டாக்டா் சபாநாயகம் கூறியதாவது:

எஸ்.பி.பி.யின் உடல்நிலையை சீராக்க அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அவருக்கு, பிளாஸ்மா சிகிச்சையும், ரெம்டெசிவிா் மருந்துகளும் அளிக்கப்பட்டன. தற்போது உயிா் காக்கும் மருத்துவ சாதனங்களின் துணையுடன் அவா் சிகிச்சை பெற்று வருகிறாா் என்றாா் அவா்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd