இம்முறை அமைச்சரவை நியமனத்தின் போது, தனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சு தொடர்பில் அதிருப்தியில் இருக்கும் அமைச்சர்களுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கோல் எடுத்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோல் எடுத்த ஜனாதிபதி, அந்த அமைச்சு தொடர்பிலான விடயதானத்தின் முக்கியத்துவம் தொடர்பில் தெளிவு படுத்தியுள்ளார் என அறியமுடிகின்றது.
இந்த அமைச்சிகளின் ஊடாக ஒரு ஆக்கபூர்வமான செயற்பாட்டை முன்னெடுக்க முடியும் என்பது தொடர்பிலும் எடுத்துரைத்துள்ளார்.
இதேவேளை, விஜயதாஸ ராஜபக்ஷவுக்கும் கோல் எடுத்து கொடுத்துள்ளார். ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, தயாசிறி ஜயசேகர, லொஹான் ரத்வத்த உள்ளிட்டவர்களுக்கு கோல் எடுத்து, தெளிவுப்படுத்தியுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை நியமனத்தின் பின்னர், தங்களுக்கு கிடைத்த அமைச்சுகள் தொடர்பில் பலரும் அதிருப்தி கொண்டிருந்தனர் என செய்திகள் வெளியாகியிருந்தன.