கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 81 பேரின் பாதுகாப்பு மீளவும் வாபஸ் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சரவை பாதுகாப்பு அகற்றப்படவுள்ளது. இது, அடுத்தவாரம் முதல் அமுல்படுத்தப்படுமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
எவ்வாறெனினும், முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பை அகற்றிக் கொள்வது தொடர்பில், இதுவரையிலும் எவ்விதமான கட்டளைகளும் தங்களுக்கு கிடைக்கவில்லை என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.