தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருக்கும் நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் தவராசா கலையரசன் தனது தவிசாளர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.
எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றில் பிரதிநிதியாகச் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு முன் சட்டப்படி தற்போதைய தவிசாளர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.
கடந்த 2006 இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தலில் நாவிதன்வெளி பிரதேச சபையில் போட்டியிட்டு உதவி தவிசாளராகத் தெரிவானார். பின்னர் 2008 இல் தவிசாளரானார்.
பின்னர் கிழக்கு மாகாண சபை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடு தெரிவாகினார். பின்னர் மீண்டும் 2018 உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் தவிசாளரானார். அப்பதவியை தற்போது இராஜிமாச் செய்துள்ளார்.