மிரிஸ்ஸ கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து கடற்றொழிலுக்காக அழைத்துச் செல்லப்பட்டு, பல்வேறு துன்புறுத்தல்களுக்கும், இம்சைகளுக்கும் உட்படுத்தப்பட்ட 16 வயது சிறுவனுக்கு பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் இடம்பெற்றுள்ளனவா? என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தனக்கு பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் இழைக்கப்பட்டதாக குறித்த சிறுவன் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, அது தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜாலிய சேனாரட்ன தெரிவித்துள்ளார்.