web log free
December 27, 2024

யாசகரின் கணக்கில் 1.4 கோடி ரூபாய்

இரத்மலான பிரதேசத்தில் யாசகத்தில் ஈடுபடும் நபரொருவரின் வங்கி கணக்கில் 140 மில்லியன் ரூபாய் வைப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

65 வயதான இந்த யாசகர், போதைக்கு அடிமையானவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகரான மேர்வின் ஜனா என்பரால் சம்பாதிக்கப்பட்ட பணமே, குறித்த யாசகரின் கணக்கில் வைப்பிலடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போதை வர்த்தகர், பூஸா சிறையில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளாரென தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த சந்தேகநபர் கடந்த காலங்களில் இவ்வாறான பாரியளவு பணத்தை, பல்வேறு நபர்களின் வங்கி கணக்குகள் ஊடாக வைப்பிலிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, ​மேர்வின் ஜனாவின் மனைவி, சகோதரி உள்ளிட்டவர்கள் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட நிலையில், பல தடவைகள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டவர்கள் என்றும் இவர்களின் வங்கிக் கணக்குகளில் 370 மில்லியன் ரூபாய் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd