கொழும்பில் வசிப்பவர்களில் 57 வீதமானோர் அதிக நிறையுடையவர்கள் என அரச மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் அநுருத்த பாதெனிய குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற மாநாடொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன் காரணமாக, ஒருவர் தன்னை சுகதேகியாக பாதுகாத்துக் கொள்ள தேவையான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் விசேட வைத்திய நிபுணர் அநுருத்த பாதெனிய தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிடின், ஜனாதிபதியின் பதவிக் காலம் நிறைவடையும் போது நாட்டில் 40 வீதமானோர் நோயாளர்களாக அடையாளம் காணப்படுவர் எனவும் விசேட வைத்திய நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் உலக சுகாதா ஸ்தாபனத்தில் அறிவிக்கப்பட்டுள்ளமைக்கு அமைய உள்ளூர் மற்றும் பாரம்பரிய உணவு பழக்கவழக்கத்தை கடைப்பிடிப்பது கட்டாயமானது என அரச மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் அநுருத்த பாதெனிய சுட்டிக்காட்டியுள்ளார்.