பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றதாக அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தனது உத்தியோக பூர்வ டுவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், புதிய பிரதமராக மீண்டும் மஹிந்த ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு தான் வாழ்த்துக்களை நேரடியாக தெரிவித்ததாகவும் அவர் இந்த பதிவில் குறிப்பட்டுள்ளார்.
அத்துடன், இலங்க்கைக்கு தொடர்ச்சியாக பெற்றுக்கொடுக்கப்பட்ட ஆதரவை அமெரிக்கா தொடர்ந்தும் வழங்குமென அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் இதன்போது பிரதமரிடம் உறுதியளித்துள்ளார்.