கொத்மலை – வேவன்டனில் உள்ள மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூர்வீக இல்லத்தில் இன்று (18) அதிகாலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
அதிகாலை 2.30 அளவில் ஏற்பட்ட இந்த தீ அனர்த்தத்தில் வீட்டின் கூரை முழுமையாக சேதமடைந்துள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா தீயணைப்பு படைப்பிரிவுக்கு சொந்தமான தீயணைப்பு வாகனத்தை பயன்படுத்தி, தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் புதல்வனான, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர்.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்றும், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கொத்மலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த தீ அனர்த்தம் காரணமாக, வேவன்டண் இல்லத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், பல உடமைகளும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.