ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்கவின் வாயை, அக்கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் தயாசிறி அடைத்தார்.
பத்திக் துணியினால் தயாரிக்கப்பட்ட முகக்கவசத்தை கொண்டே தயாசிறி ஜயசேகர, துமிந்தவின் வாயையும் மூக்கையும் நேற்று (17) அடைத்துவிட்டார்.
தனக்கு கிடைத்திருக்கும் இந்த பத்திக் அமைச்சின் ஊடாக, செயற்றிட்டங்களை முன்னெடுப்பேன். திருப்தியுடன் வேலை செய்வேன் என்று இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
1994ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவுக்கு அன்றிருந்த ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எவ்வாறு நடத்தினாரோ அதேபோல்தான் தானும் நடத்தப்பட்டேன் என்றும் தயாசிறி தெரிவித்தார்.
தனது கடமைகளை அமைச்சில் நேற்று (17) பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.