தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் (NYSC) பணிப்பாளர் சபைக்கு புதிய உறுப்பினர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸவினால் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பணிப்பாளர் சபைக்கான புதிய உறுப்பினர்களாக இராஜ் வீரரத்னவும், தெஹானி இமாராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (18) முதல் மூன்று வருடங்களுக்கு அல்லது மறு அறிவித்தல் வரை செல்லுபடியாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.