பாதாள உலக கோஷ்டியினருக்கு ஆயுதம் கடத்திய ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய பத்திரிகையொன்றில் கடமையாற்றும் ஊடகவியலாளர் ஒருவரே இவ்வாறு நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றியிருந்த காலத்தில் நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
அந்த சந்தர்ப்பத்தில், ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட விசேட அனுமதியை பயன்படுத்தியே அவர், வெளி மாவட்டத்திலிருந்து ஆயுதங்களை கடத்தி, பாதாள உலகக் கோஷ்டியினரிடம் வழங்கியுள்ளார்.
அவர், மவ்மிம பத்திரிகையின் ஊடகவியலாளராக கடமையாற்றிய பிரசாத் அபேவிக்ரம என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஆயுதங்களை கடத்துவதற்காக, சுமார் ஒன்றரை இலட்சம் ரூபாயை வாங்கியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.