தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றத் கூட்டம் நாளை மறுதினம் வியாழக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது.
இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதவிநிலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக கூட்டமைப்பிற்கு புதிய பேச்சாளர் ஒருவர் நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான தீர்மானம் ஒன்று கூட்டமைப்பின் பங்களிக்க கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்திய செயற்குழு நேற்று கூடியபோது நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
டெலோவின் இந்த தீர்மானம் நாளை மறுதினம் நடைபெறவுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்றத் குழு கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு வலியுறுத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுத்தேர்தல் இடம்பெற்றதன் பின்னர் வாக்குவீதம் சரிவு, தேசியப்பட்டியல் விவகாரம் என கூட்டமைப்பிற்குள் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் முதலாவது நாடாளுமன்ற கூட்டம் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.