ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுத்துள்ள அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார் என அறியமுடிகின்றது.
கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட்ட மைத்திரி, பொலன்னறுவை மாவட்டத்தில் ஆகக் கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றார்.
எனினும், கடந்த 12ஆம் திகதியன்று நியமிக்கப்பட்ட புதிய அமைச்சரவையில், அவருக்கு எந்தவொரு பதவியும் வழங்கப்படவில்லை.
இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினருக்கு வழங்கப்பட்டிருக்கும் அமைச்சு மற்றும் இரண்டு இராஜாங்க அமைச்சுப் பதவிகள் தொடர்பில் சுதந்திரக் கட்சி திருப்தி கொள்ளவில்லை என அறியமுடிகின்றது.