web log free
December 28, 2024

மருமகளுக்காக நாக்கை அறுத்த மாமியார்


திருமண பந்தங்களில் மிகவும் முதன்மையான உறவு ஒன்று மாமியார், மருமகள். இந்த உறவு சிக்கல்களும், சண்டைகளும் நிறைந்தவை.

ஆனால் மருமகளை தன் மகள் போலவே எண்ணும் மாமியார், தன் தாய் போல நினைக்கும் மருமகள் என்று நினைக்கும் அளவுக்கு இருக்கும் பெண்களும் இருக்கி றார்கள்.

ஜார்கண்ட் மாநிலத்தில் காணாமல் போன தனது மருமகள் கிடைக்க மாமியார் ஒருவர் தனது நாக்கை வெட்டி கடவுளுக்கு காணிக்கையாக கொடுத்து உள்ளார்.

இது மூட நம்பிக்கை என்று கூறப்பட்டாலும் அன்பின் ஆழமான அடையாளமாகவும் இருக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலம் செராகேலா-கர்சவன் மாவட்டத்திலுள்ள என்ஐடி பகுதியை லட்சுமி நிர்லா இவரது மருமகள் ஜோதி. இவர் கடந்த 14ஆம் திகதி தனது குழந்தையுடன் காணாமல் போனார்.

அவர்கள் வெள்ளிக்கிழமை ஜோதியைத் தேடத் தொடங்கினர்.ஆனால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.மனைவி காணவில்லை என ஜோதியின் கணவர் பொலிஸில் புகார் செய்துஉள்ளார்.

இந்த நிலையில் மருமகள் மீது மிகுந்த அன்புவைத்து இருந்த லட்சுமி தனது மருமகள் மீண்டும் கிடைக்க வேண்டும் என கடவுளை வேண்டினார்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை லட்சுமி அங்குள்ள சிவபெருமான் கோயிலில் தனது மருமகள் மீண்டும் கிடைக்க தனது நாக்கை அறுத்து காணிக்கையாக கொடுத்தார். இதனால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து லட்சுமியின் கணவர் நந்து லால் நிராலா கூறும் போது யாரோ ஒருவர் அவள் நாக்கை கடவுளுக்கு வழங்கினால், ஜோதி திரும்பி வருவான் என்று யாரோ அவளிடம் சொன்னார்கள். இதை நம்பி அவர் இதனை செய்து விட்டார் என கூறினார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd