98 இலட்சம் ரூபாய் காசோலை மற்றும் ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரணை செய்யப்படும் வெயன்கொட ஹெட்டியாவின், 6 மனைவிகளிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேகாலை, வீரகுல, வெயங்கொட, கலகெடிஹேன மற்றும் நிட்டம்புவ பிரதேசத்தினை சேர்ந்த குறித்த பெண்கள் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் 10 வருடங்கள் வரை ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ள நிலையில் அவர் மற்றும் மனைவி இரு பிள்ளைகளின் வங்கி கணக்கினை இரத்து செய்வதற்கு பொலிஸார், நீதிமன்ற உத்தரவினை பெற்றுள்ளனர்.
இதேவேளை தகாத உறவில் இருந்த மனைவிகளினது வங்கி கணக்குகளை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.