நாடாளுமன்றில் எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளராக நியமிக்கப்படவுள்ளவரின் பெயர் இன்று அல்லது நாளைய தினம் அறிவிக்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
பெரும்பாலும் இன்றைய தினம் அதற்கான பெயரை அறிவிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தி தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, ஹர்ஷ டி சில்வா, பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் கபீர் ஹஷிம் ஆகியோரின் பெயர்கள் இதற்காக முன்மொழியப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.
எவ்வாறாயினும் எந்தவொரு பெயரும் இதுவரையில் முன்மொழியப்படவில்லை ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்தார்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக அதன் பிரதான பிரதிநிதிகளுக்கு இடையில் கொழும்பில் நேற்றிரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.