பிரபல சிங்கள பாடகர் இராஜ் வீரரத்ன தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அடுத்த மூன்றாண்டுகளுக்கு அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.
இராஜ் வீரரத்ன, கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவான பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்தார்.
அத்துடன் அமைச்சர் நாமல் ராஜபக்ச மற்றும் ராஜாங்க அமைச்சர் காஞ்சன வீரசேகர ஆகியோரின் தேர்தல் பிரச்சாரங்களில் கலந்துக்கொண்டார்.
நாமல் ராஜபக்ச விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் முக்கிய பொறுப்பு இராஜ் வீரரத்னவுக்கு வழங்கப்பட்டுள்ளது.