50,000 பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு என அரசாங்கம் ஆரம்பித்துள்ள திட்டத்தில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதென தெரிவித்து சில பட்டதாரிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின் ஆர்ப்பாட்டக்காரர்களை சந்திக்கச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக உறுதி அளித்தார்.
அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜகாதிபதி உறுதி அளித்தார். ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட 50000 பட்டதாரிகளுக்கு மேலதிகமாக 10000 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க இன்ற இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்பதால் வெயிலில் காயாமல் வீடு செல்லுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகளிடம் கேட்டுக் கொண்டார்