புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகரான மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் பெயரை பரிந்துரைப்பதற்கு, தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில், இன்று (19) மாலை நடைபெற்ற, ஆளுங்கட்சியின் கூட்டத்திலேயே மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.