19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இரத்து செய்து, 20 ஆவது திருத்தத்திற்கான சட்டமூலத்தை தயாரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சரவைப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர்களான ரமேஷ் பத்திரண மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவை இணைப்பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் இன்று முற்பகல் புதிய அரசாங்கத்தின் கன்னி அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது.