புதிய பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைப்பதற்காக, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நாளை மாலை 3 மணிக்கு பாராளுமன்றத்துக்கு வருகைதரவுள்ளார்.
முன்னைய அமர்வுகளை ஆரம்பித்து வைப்பதற்கு, ஜனாதிபதிகள் பாராளுமன்றத்துக்கு வருகைதரும்போது, குதிரைப்படை, மோட்டார் அணிவகுப்புகள் இடம்பெறும். இராணுவ அணிவகுப்பும் மரியாதை வேட்டுகளும் தீர்க்கப்படும். எனினும், இம்முறை அவையொன்றும் இடம்பெறாது.
எனினும், படையினர் பங்குபற்றலும் வரவேற்பு நடனம் ஆடப்படும். அதற்கான ஒத்திகை, பாராளுமன்றத்தில் நேற்று (19) பார்க்கப்பட்டது.
படையினரின் ஒத்திகையுடன், ஜயமங்கள் கீதம் இசைக்கப்படும். அதனை, பாடசாலை மாணவிகள் ஒத்திகை பார்த்தனர்.