எந்தவொரு பொறுப்புணர்வும் இன்றி உற்பத்தி செய்யப்படவோ அல்லது விநியோகிக்கவோ முடியாத, புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனங்கள் அடங்கிய ஆயிரத்துக்கும் அதிகமான முகப்பூச்சு மற்றும் தோல்களுக்கு பூசும் லோஷன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
புத்தளம் மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளால் இன்று (19) புத்தளம் நகரில் இருந்த 14 அழகு நிலையங்களில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது, இந்த அழகுசாதன பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த அழகுசாதன பொருள்கள் பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.