சபாநாயகருக்கு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து கொண்டிருக்கின்றர். இதில், முஸ்லிம் தேசிய காங்கிரஸின் தலைவர் அத்தாவுல்லா வாழ்த்து தெரிவித்துகொண்டிருக்கின்றார்.
சிரேஷ்ட தலைவர்களான மஹிந்த ராஜபக்ஷவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்த சபையில் இருக்கின்றனர்.
ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் சிரேஷ்ட அரசியல் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, இல்லாத இந்த சபைக்கு நீங்கள் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பில் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.