புதிய சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் கூடியது.
சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்தனர் பின்னர், பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவு செய்யப்பட்டார்.
குழுக்களின் பிரதித் தலைவராக அங்கஜன் ராமநாதன் தெரிவு செய்யப்பட்டார்.
அதன்பின்னர், எதிர்க்கட்சித் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாஸவை, ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.