மக்கள் வழங்கியுள்ள ஆணைமூலம் 19ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படும் என்பதுடன், அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி நாட்டுக்கு பொறுத்தமான புதிய அரசியலமைப்பொன்று அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன், விகிதாசார தேர்தல் முறையில் உள்ள பயனுள்ள விடயங்களை உள்வாங்கி புதிய தேர்தல்முறையொன்று அறிமுகப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை சற்றுமுன்னர் பாராளுமன்றில் நிகழ்த்திய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்