நாடாளுமன்றம் இன்று (21) காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது. இதன்போது ஜனாதிபதியினால் நேற்று (20) முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் தொடர்பில் விவாதம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 6.30 மணிவரை நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கும், அத்தினங்களில் மதிய போசன இடைவேளையின்றி அமர்வுகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.