web log free
May 10, 2025

யார் வந்தாலும் நன்மையில்லை


“ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டாலும் செய்யப்படாவிட்டாலும் நாட்டுக்கோ அல்லது கட்சிக்கோ எவ்வித நன்மையும் இடம்பெறப்போவதில்லை.

கடந்த 25 வருடங்களாக ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்த செயற்பாடுகளே இதற்கு காரணமாகும்” என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ரணில் விக்ரமசிங்க எல்லா சந்தர்ப்பங்களிலும் கட்சியை செயற்திறனற்றதாக்கும் வகையிலேயே செயற்பட்டுள்ளார். கடந்த 25 வருடங்களும் அவர் இதனையே செய்தார். எனவே ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை மாற்றினாலும் மாற்றவில்லை என்றாலும் நாட்டுக்கோ அல்லது மக்களுக்கோ எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை.

ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களே எம்மை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்துள்ளனர். ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் பெயர் இல்லாமல் மாற்றத்துடனேயே நாம் நாடாளுமன்றம் செல்கின்றோம். கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவினுடைய செயற்பாடுகளே இதற்கு காரணமாகும். பொதுத் தேர்தல் முடிவுகள் அவரது செயற்பாடுகளின் பலனாகும்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக யார் தெரிவு செய்யப்பட்டாலும் அதனால் நாட்டுக்கோ அல்லது அந்த கட்சிக்கோ எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை. ரணில் விக்ரமசிங்க போன்றவர்களே தற்போது அங்கு உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd