எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இம்முறை நாடாளுமன்றத்தில் உரையாற்ற குறைந்தளவு நேரமே ஒதுக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிக்குத் தான் விவாதத்திற்கு அதிக நேரம் தரப்படுகிறது. எனினும், ஆளுங்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது என மனோ கணேசன் குறிப்பிட்டார்.
60-40 என்ற அடிப்படையில் 60 வீதம் எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட வேண்டும். இங்கு 60 வீதத்தை ஆளுங்கட்சி எடுத்துக்கொண்டுள்ளார்கள்.
ஜனநாயகம் கிடைக்க வேண்டும் என்றால் எதிர்க்கட்சிக்கு தான் விவாதம் செய்வதற்கு அதிக நேரம் கொடுக்கப்பட வேண்டும் என மனோ கணேசன் வலியுறுத்தினார்.