ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையில் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வுகளும் இல்லை எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சியின் பிரதமக் கொறடா நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல, ஜனாதிபதி கூறும் ஒரே சட்டம், ஒரே நாடு சாத்தியப்படாத ஒன்று என்றார்.
மேலும் 19ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக 2015இல் கையுயர்த்திய தற்போதைய ஆளுங்கட்சியினர், ஏன் இப்போது 19ஐ நீக்க அவசரப்படுகறார் எனவும் கேள்வி எழுப்பினார்.
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்