பாராளுமன்றத்தில் தற்போதைய அரசாங்கத்துக்கு கிடைத்திருக்கும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை இல்லாமல் செய்வதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கைகளை எடுத்துவருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்றத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, இம்முறை 15 உறுப்பினர்கள் இருக்கின்றன.
அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளவோ அல்லது மாற்றவேண்டுமாயின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வேண்டும்.
எனினும், சுதந்திரக் கட்சியினருக்கு கிடைத்திருக்கும் அமைச்சுப் பொறுப்புகளை பார்க்குமிடத்து, கட்சிக்குள் முரண்பாடுகள் தோன்றியுள்ளன. ஆகையால், பேரம் பேசுவதற்கு சுதந்திரக் கட்சி முயற்சித்து வருவதாக அறியமுடிகின்றது.
புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்காக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, குழுவொன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.