web log free
February 02, 2026

46 குழந்தைகள் சிறையில் உள்ளனர்

 சிறைச்சாலையில் உள்ள தாய்மார்களுடன் அடைக்கப்படும் குழந்தைகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

5 வயதிற்கு உட்பட்ட 46 குழந்தைகள் தற்போது நாடு முழுவதும் உள்ள சிறைகளில் தங்கள் தாய்மார்களின் பராமரிப்பில் உள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து அக்குழந்தைகள் விடுவிக்கப்படவுள்ளனர் என பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சிறைச்சாலையில் பெண்களுக்கு பிறந்த குழந்தைகள் மற்றும் பல்வேறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாய்மார்களின் பராமரிப்பில் உள்ள சிறு குழந்தைகள் பற்றிய ஊடக அறிக்கையில் ராஜபக்ஷவின் கவனத்தை ஈர்த்தது.

இதனை அடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குழந்தைகள் குறித்த தகவல்களைத் தேடியதுடன், குழந்தைகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

சிறைச்சாலை சீர்திருத்தங்களுக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே பிரதமரின் ஊடக பிரிவுக்கு குழந்தைகளைப் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், குழந்தைகளை விடுவிப்பதற்கான செயன்முறைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், தகுந்த நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd