ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் பயிற்சி நெறியில் கலந்துகொள்ளுமாறு புதிய உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இந்த பயிற்சிநெறி நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை மறுதினம் நாடளுமன்றத்தின் முதலாவது குழு அறையில் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க அறிவித்துள்ளார்.
காலை 9 மணிமுதல் மாலை 6 மணி வரையிலும் இந்த செயலமர்வு இடம்பெறும்.
இந்த பயிற்சி நெறியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
நாடாளுமன்றத்தின் ஆரம்பகட்ட விடயங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் நோக்கில், இந்த பயிற்சிநெறி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.