சிங்கராஜ வனாந்தரத்தை அண்மித்த பகுதியில் தனக்கு ஹோட்டல் இருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித்த ராஜபக்ஷ, சூழலியலாளர் சஜீவ சாம்கரவுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
யோஷித்த ராஜபக்ஷவின் ஹோட்டலுக்கு செல்லும் வகையிலேயே இந்த வீதி புனரமைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.