“சிறந்த இலங்கைக்காக குமார் சங்கக்கார“ என்ற பெயரில் உள்ள பேஸ்புக் கணக்கு தன்னுடையதல்ல என, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் வலைத்தளம் ஊடாகவே, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
எனவே, செய்தி புதுப்பிப்புக்கள் மற்றும் திட்டங்கள் தொடர்பான தகவல்கள் என்பவைத் தொடர்பில் அறிந்துக்கொள்ள தனது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் வலைத்தளத்தை பின்தொடருமாறும் குமார் சங்கக்கார பதிவிட்டுள்ளார்.