வெளிநாடுகளில் கொவிட் – 19 தொற்று பரவல் தொடர்ந்தும் காணப்படும் நிலையில், இலங்கையை கொவிட் – 19 தொற்று இல்லாத நாடாக பிரகடனப்படுத்த முடியாது என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இருப்பினும் வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமையினால் இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், நாட்டு மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும் எனவும், சிறிய தவறுகளினால் கொரோனா தொற்று பரவலாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், நாட்டில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதாக மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டிருந்தாலும், அதனை உறுதியாக கூற முடியாது என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.