சந்தைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள மஞ்சள் தூளில் கோதுமை மா கலந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 80 வீதமான மஞ்சள் தூளில் கலப்படம் உள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தைகளிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், தர நிர்ணய கட்டுப்பாட்டு சபையினூடாக பரிசோதிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த பரிசோதனை மூலம் மஞ்சள் தூளில் 80 வீத கோதுமை மா கலக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சபையின் தலைவர், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஷாந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மஞ்சள் தூளில் கலப்படம் செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.