தென்னிலங்கை அரசியல் பரப்பில் சர்ச்சையை ஏற்படுத்திய தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனின் பாராளுமன்ற உரை, ஹன்சாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.
உலகில் உயிர்வாழும் மூத்த மொழிகளில் ஒன்றும், இந்நாட்டின் முதல் சுதேச குடிமக்களின் மொழியிலும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கடந்த 20 ஆம் திகதி உரை ஆற்றினார்.
இதனை அடுத்து சி.வி.விக்னேஸ்வரனின் உரையை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார கோரிக்கை விடுத்திருந்தார்.
இது குறித்து ஆராய்வதாக குறித்த தினமே சபாநாயகர் மஹிந்த யப்பா அபேவர்தன தெரிவித்திருந்தபோதும் விக்னேஸ்வரனின் உரையின் விவரிக்கப்படாத பதிப்பு பாராளுமன்றத்தின் ஹன்சாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.