யானையை சின்னமாகக் கொண்ட ஐக்கிய தேசிய கட்சிக்கு, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
- எவ்விதமான நிபந்தனைகளும் இன்றி, சஜித் பிரேமதாஸவை ஐ.தே.கவின் தலைவராக நியமிக்கவேண்டும்.
- ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்குள் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்துகொள்ளவேண்டும்.
மக்கள் தங்களுடைய தீர்ப்பின் பிரகாரம் ஐக்கிய தேசியக் கட்சியை முற்றுமுழுதாக ஓரங்கட்டியுள்ளனர் எனத் தெரிவித்த கட்சியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, கட்சியிலிருந்து உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் எக்காரணத்துக்காகவும் ஓரங்கட்டப்படக்கூடாது. அவ்வாறு செய்யப்படுமாயின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.