பேச்சுவார்த்தைக்கென்று இந்தியாவினால் விருந்தினராக அழைத்துச்செல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், புதுடில்லியில் 'அசோகா ஹொட்டேல்' அறை இலக்கம் 518 இல் தடுத்து வைக்கப்பட்டு, இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்.
இந்திய பாதுகாப்பு சிறப்பு அதிரடிப்படையான கறுப்புப்பூணைகளின் பாதுகாப்பில், வெளித்தொடர்புகள் அற்ற நிலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், ஒரு சந்தர்ப்பத்தில் தனது கழுத்தில் தொங்கிய 'சயனைட்டை' உட்கொண்டு தற்கொலைசெய்துகொள்ள நினைத்திருந்ததாக, வைகோ பின்நாட்களில் தெரிவித்திருந்தார்.
ஈழத்தமிழர்களது மாத்திரமல்லாது இந்தியாவின் வரலாற்றைக்கூட மாற்றியெழுதிய புதுடில்லி 'அசோகா ஹெட்டேல்' சம்பவம்